கணவரை கடத்தி மனைவியிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

 


திருப்பூர் மாவட்டம், அவிநாசியை அடுத்து பெருமாநல்லூர் அருகே காளம்பாளையத்தில் வசித்து வருபவர் சந்தோஷ். இவரது மனைவி மனினீமேகர். இவர்கள் இருவரும் அவிநாசி பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி இரவு சந்தோஷ் தன்னுடன் வேலை பார்த்த ஒருவரை வீட்டில் விட்டுவிட்டு வருவதாக மனைவிடம் கூறிவிட்டு சென்றவர், இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வராததால் கணவருக்கு போன் செய்துள்ளார். அப்போது வந்து விடுவதாக கணவர் கூறியுள்ளார்.

இந்நிலையில் அதிகாலையில் மனினீமேகருக்கு போன் செய்த மர்ம நபர்கள் கணவர் சந்தோஷை கடத்தி விட்டதாகவும், அவரை விடுவிக்க தங்களது வங்கி கணக்கிற்கு ரூ.2 லட்சம் பணம் செலுத்துமாறும் கூறியுள்ளனர். இதனையடுத்து, மனினீமேகர் 25 ஆயிரம் பணத்தை மட்டும் கடத்தல்காரர்கள் கூறிய வங்கிக் கணக்கில் செலுத்தி உள்ளார்.


இதனையடுத்து மனினீமேகருக்கு மீண்டும் போன் செய்த மர்ம நபர்கள் மீதி பணத்தை தரவில்லை என்றால், உன்னை கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளனர். இதில் பயந்து போன மனினீமேகர் பெருமாநல்லூர் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் செல்போனை ஆய்வு செய்ததில் கடத்தல்காரர்கள் தேனியில் இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து உடனடியாக தேனி சென்ற தனிப்படை போலீசார் அங்கு விடுதியில் தங்கியிருந்த கடத்தல்காரர்களிடம் இருந்து காயங்களுடன் இருந்த சந்தோஷை மீட்டனர். மேலும் கடத்தலில் ஈடுபட்ட தினேஷ்குமார், முத்துக்குமார், சரவணன், தேவா, ஈஸ்வரன், ரீதோய், ரையான் ஷேக் உள்ளிட்டோரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)