மிரட்டும் கொரோனா - 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்


கொரோனா மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், அவற்றை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு டெல்லி உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராஜேஷ் பூஷன், டெல்லி, உத்தரப்பிரதேசம், ஹரியானா, மகாராஷ்டிரா, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 2 மாதங்கள் பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்த நிலையில், கடந்த வாரம் தினமும் ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

தலைநகர் டெல்லியில் 1.42 விழுக்காடாக இருந்த கொரோனா பரவல், தற்போது 3.49 விழுக்காடாக உயர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள மத்திய சுகாதாரத்துறை, கொரோனாவை தொடர்ந்து கண்காணிக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளது. பரிசோதனைகளை அதிகப்படுத்துதல், முகக்கவசம் அணிவதில் கவனம் செலுத்துதல், தடுப்பூசி போடும் பணிகளை விரிவுப்படுத்துதல் போன்றவற்றை பின்பற்றவும் மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு