மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திலேயே தொழிலதிபரிம் ரூ.5 லட்சம் வாங்கிய நாகர்கோவில் டிஎஸ்பி! அதிரடி கைது…


எஸ்.பி. அலுவலகத்திலேயே தொழிலதிபரிம் ரூ.5 லட்சம் வாங்கிய நாகர்கோவல் டிஎஸ்பி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் லஞ்சம், ஊழல், பெண்கள் மீதான வன்கொடுமைகள், போதைப்பொருள் உபயோகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்கும் நடவடிக்கை களை தீவிரப்படுத்தி உள்ளதாக உள்ள காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கூறியிருந்தாலும், காவல்துறையிலேயே லஞ்ச லாவணம் தலைவிரித்தாடுவது பல்வேறு சம்பவங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

நாகர்கோவிலில் ஜவுளிக்கடைகள் நடத்தும் தொழிலதிபர் ஒருவரிடம் நிலப்பிரச்சினை காரணமாக ரூ.5 லட்சம் லஞ்சம் லஞ்சப்பணத்தை நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தின் உள்ளேயே வைத்து டிஎஸ்பி வாங்கிய  விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. விசாரணையில்,  நாகர்கோவில் புன்னைநகரை சேர்ந்தவர் சிவகுற்றாலம் என்பவர் ஜவுளிக்கடை நடத்தி வருவதாகவும், தொழிலதிபரான இவர் வெள்ளிசந்தை அருகே நிலம் வாங்க முடிவு செய்து அதன்படி நிலம் விற்பகதாக கூறி 2 பேர் அவரிடம்  ரூ.1.5 கோடியை  வாங்கியதும், பின்னர் அந்த நிலத்தை முறையாக பதிவு செய்து கொடுக்காமலும், பணத்தை திருப்பி கொடுக்காதாலும், சிவகுற்றாலம் அவர்கள் 2 பேர் மீது  நாகர்கோவில் எஸ்பி அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார்.


இந்த புகாரை  டிஎஸ்பி தங்கவேல் என்பவர் விசாரணை நடத்தி வந்தார். இவர் இருதரப்புக்கும் இடையே கட்டப்பஞ்சாயத்து நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. பின்னர், சிவகுற்றாலத்தில், பிரச்சினையை சுமூகமாக முடித்து வைக்க ரூ.10 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளார். அதற்கு சிவகுற்றாலம் மறுத்துள்ளார். இந்த விவகாரம் காவல்துறை வரை சென்றுவிட்டதால், சிவகுற்றாலத்திடம் பணம் வாங்கிய நிபர்கள் இருவரும் ஏற்கனவே சொன்னபடி நிலத்தை பதிவு செய்து கொடுத்துள்ளனர்.

இந்த விவரங்களை தெரிந்துகொண்ட டிஎஸ்பி தங்கவேல், மீண்டும் சிவகுற்றாலத்தை தொடர்புகொண்டு, தன்னால்தான் வேலை முடிந்தது என கூறி, தனக்கு ரூ.5 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார். இதனால் கடும் மனஉளைச்சலுக்க ஆளான சிவகுற்றாலம்,  நாகர்கோவில் லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து,  லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.5 லட்சத்தை ரசாயன பவுடர் தடவி சிவகுற்றாலத்திடம் கொடுத்து அனுப்பினர்.  அதன்படி சிவகுற்றாலம், நேற்று மாலை மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் இருந்த டிஎஸ்பி தங்கவேலிடம்அந்த ரூ.5 லட்சத்தை கொடுத்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்சஒழிப்பு போலீசார் டிஎஸ்பி தங்கவேலுவை கைது செய்தனர்.

இதையடுத்து டிஎஸ்.பி.யின் வீட்டிலும்  சோதனை நடத்தினர். கைது செய்யப்பட்ட டிஎஸ்பி தங்கவேல் கோவை மாவட்டம் சூலூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். எஸ்பி அலுவலக வளாகத்திலேயே டிஎஸ்பி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்