கள்ளச்சாராய விற்பனையை தடுக்காத காவல் நிலையம் : ஆய்வாளர் உள்ளிட்ட 30 பேரை டிரான்ஸ்ஃபர் செய்த டிஐஜி !!
வாணியம்பாடியில் சாராய விற்பனை தடுக்க தவறிய வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் பணியிடை மாற்றம் வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவு பிறப்பித்ததார்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேதாஜி நகர், இந்திரா நகர், காமராஜ் நகர், மற்றும் லாலா ஏரி பகுதியில் கள்ளச்சாராயம் அதிக அளவில் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் புகார் அளித்து சாராய பாக்கெட்டுகளை கைப்பற்றி சாலையில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்ட சாராய கொட்டகைக்கு தீ வைத்து எரிப்பு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா தனிப்படை அமைத்து உடனடியாக சாராய கும்பலை கைது செய்ய உத்தரவிட்டார் தொடர்ந்து சாராய வழக்கில் முக்கிய குற்றவாளியான மகேஸ்வரி உட்பட 20 பேரை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்த கள்ளச்சாராயம் கைப்பற்றி சிறையில் அடைத்தனர்.
அதை தொடர்ந்து பொதுமக்கள் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க தவறிய வாணியம்பாடி கிராமிய காவல் ஆய்வாளர் பழனி முத்து பணியிட மாற்றம் செய்து வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்த 2 உதவி ஆய்வாளர்கள், 5 சிறப்பு உதவி ஆய்வாளர்கள்,7 தலைமை காவலர்கள், 4 பெண் காவலர்கள், 9 காவலர்கள் உட்பட 30 பேர் கூண்டோடு பணியிடமாற்றம் செய்து திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சாராயத்தை தடுக்கத் தவறிய ஆய்வாளர் உட்பட 30 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் திருப்பத்தூர் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.