ஸ்ரீ வித்யா மந்திர் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்வு

 


ஊத்தங்கரை ஸ்ரீ வித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் (தன்னாட்சி) கல்லூரியில் 15.03.2022 (செவ்வாய்) அன்று  முன்னாள் மாணவர் சங்கம்  சார்பில் இந்திய தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. 

இந்த நிகழ்விற்கு வருகை புரிந்த அனைவரையும் முன்னாள் மாணவர் சங்க இணைச் செயலர் திரு. செ. தெய்வம் வரவேற்றார்.  நிகழ்வின் நோக்கம் குறித்தும் தேசிய நுகர்வோர் தினம் குறித்தும் கல்லூரியின் முன்னாள் மாணவர் சங்கத்தின் தலைவர் திரு. சி. பூபாலன் எடுத்துரைத்தார். கல்லூரியின் நிறுவனர் திருமிகு வே. சந்திரசேகரன் அவர்கள் தலைமை வகித்தார். கல்லூரியின் செயலர் திரு. ஆர். பீ. இராஜீ, இணைச்செயலர் திரு பெ. வெங்கடாசலம், முதல்வர் முனைவர் த. பாலசுப்பிரமணியன் துணை முதல்வர் முனைவர் ந. குணசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். 

பத்து ரூபாய் இயக்கத்தின் துணை பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திரு. எஸ். குணசேகரன் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு தகவல் அறியும் உரிமை சட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பற்றி எடுத்துரைத்தார்.

அதைத்தொடர்ந்து தகவல் அறியும் உரிமைச் சட்டம் என்றால் என்ன? எவ்வாறு நாம் அச்சட்டத்தைப் பயன்படுத்துவது? அதற்கான அடிப்படையான அனைத்து செய்திகளையும் மிகத் தெளிவாக தர்மபுரி ஒருங்கிணைந்த மாவட்ட  பத்து ரூபாய் இயக்கத்தின் செயலாளர் பேராயர் முனைவர் எம். பிலிப் எடுத்துரைத்தார். 

தர்மபுரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கத்தின் செயலாளர் கே.எஸ். கோவிந்தசாமி தகவல் அறியும் உரிமைச்  சட்டத்தின் மூலமாக தன்னுடைய சாதனைகளை எடுத்துரைத்தார்.  அதைத்தொடர்ந்து, தர்மபுரி மாவட்ட தொழில்நுட்ப பிரிவு செயலாளர். முனைவர் எஸ். பரசுராமன் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஆய்வு செய்ததையும் மற்றும் பட்டா பெற்றுக் கொண்டதை குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

தர்மபுரி மாவட்ட பத்து ரூபாய் இயக்கத்தின் ஆலோசகர் திரு. ஜி. காவேரி, திரு. அ. மணி, ஊத்தங்கரை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர், திரு. அ. விசு, சிங்காரப்பேட்டை கிளை நிர்வாகி அவர்கள் தகவல்   அறியும் உரிமைச் சட்டம் குறித்து விழிப்புணர்வை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். 

நிகழ்வின் இறுதியில் மாணவர்கள் அனைவரும் யாரும் கையூட்டு பெற மாட்டோம், சட்டப்படி போராடுவோம், சட்ட ஆயுதம் ஏந்துவோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

இந்த நிகழ்வில் கல்லூரியின் அனைத்துத் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் ஐநூற்றுக்கும்  மேற்பட்ட மாணவர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர். முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் திரு. மு. பாண்டியராஜ் ஒருங்கிணைத்தார்.  நிகழ்வின் இறுதியாக முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர் திருமதி இ. இலக்கியா நன்றி கூறினார். முன்னாள் மாணவர் சங்க குழுவினர் விழிப்புணர்வு நிகழ்வு ஏற்பாடுகளை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)