நவாஸ்கனி எம்பி உள்ளிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒத்திவைப்பு தீர்மானம் கோரியுள்ளனர்.

 


ஹிஜாப் விவகாரம் குறித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பாக நாடாளுமன்றத்தை ஒத்திவைத்துவிட்டு இந்த முக்கிய பிரச்சினை குறித்து விவாதிப்பதற்கு இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி உள்ளிட்ட இந்திய முஸ்லிம் லீக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஈ.டி முஹம்மது பஷீர், எம் பி அப்துல் சமது சமதானி உள்ளிட்டோர் ஒத்திவைப்பு தீர்மானம் கோரியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் ஒத்திவைப்பு தீர்மானம் கோரியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டு இருந்ததாவது,
ஹிஜாப் தொடர்பான கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு மத சுதந்திரத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது.
உயர் நீதிமன்றம் ஹிஜாப் தடையை உறுதி செய்தது மட்டுமல்லாது, ஹிஜாப் மீதான தடையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடியும் செய்திருக்கிறது.
ஹிஜாப் என்பது இஸ்லாமிய நம்பிக்கையின் இன்றியமையாத அங்கமாக இருக்கிறது.
இந்த தீர்ப்பு, குறிப்பாக இஸ்லாமிய மாணவிகளின் கல்வியில் பல எதிர்மறை தாக்கங்களை ஏற்படுத்தக்கூடியது.
அவர்கள் நம்பிக்கை சார்ந்த விஷயத்தை தேர்வுசெய்யும் உரிமை பறிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பல்வேறு மாணவர் அமைப்புகள் எடுத்து வரும் நிலைப்பாடுகள், வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையக்கூடும் என்பதற்கான அறிகுறியாகும்.
இந்த சிக்கலான சூழ்நிலையில் நாடாளுமன்றத்தின் Parliament's legislative competency - ஐ பயன்படுத்தி அரசு தலையிட வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்.
இவ்வாறு ஒத்திவைப்புத் தீர்மானம் கோரியுள்ள இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி எம்பி உள்ளிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)