நாகர்கோவிலில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வீட்டில் அதிரடி சோதனை : கன்னியாகுமரியில் பரபரப்பு!
நாகர்கோவிலில் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் கண்மணி. இவர் ஏற்கனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். நாகர்கோவில் கீழ ராமன்புதூர் பகுதியில் இவரது வீடு உள்ளது இவரது கணவர் சேவியர் பாண்டியன் அரசு வழக்கறிஞராக உள்ளார் இவர்கள் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வந்த புகாரை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
ஆய்வாளர் கண்மணி வீட்டில் இருந்து லட்சக்கணக்கான பணம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதேபோல் அழகு நிலையம் வைத்திருப்பவர்களும் வரை சோதனை நடத்தி வந்தனர். கடந்த ஆண்டு மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தால் குற்ற வழக்குகளில் சிறப்பாக விசாரணை நடத்திய தமிழகத்தின் சிறந்த காவல் ஆய்வாளர் களில் ஒருவராக கண்மணி தேர்வு செய்யப்பட்ட அவருக்கு விருதும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஆய்வாளரை லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சோதனை நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர் மீது பல்வேறு போவார்கள் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அனுப்பப்பட்டதாக தெரிகிறது.