“வாக்குச்சீட்டுடன் பணப்பட்டுவாடா.. அதிகாரிகளை கண்டதும் தெரித்து ஓடிய அதிமுக நிர்வாகிகள்” : ஒருவர் கைது!

 


தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதுமுள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிககள் என மொத்தம் 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,369, நகராட்சி வார்டுகள் 3,824 ,பேரூராட்சி வார்டுகள் 7409 என மொத்தம் 12602 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் தேர்தலில் 2.50 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள் என தேர்தல் ஆனையம் தெரிவித்துள்ளது. மேலும் 1.13 லட்சம் போலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுள்ளனர்.

இதனையடுத்து பொதுமக்கள் அமைதியான முறையில் தனது வாக்கை செலுத்தி வருகின்றனர். அதன்படி, காலையில், காலை 9 மணி நிலவரப்படி மாநகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 5.78% வாக்குகளும், நகராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 10.32% வாக்குகள் வாக்குகளும், பேரூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் 11.74% வாக்குகள் வாக்குகளும் என சராசரியாக மொத்தம் 8.21% வாக்குகளும் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி 179வது வார்டு திருவான்மியூரில் வாக்குச்சீட்டுடன் பணப்பட்டுவாடா செய்த அ.தி.மு.க பெண் நிர்வாகியை பொதுமக்கள் பிடித்து தேர்தல் பறக்கும்படையினரிடம் ஒப்படைத்தனர்.

சென்னை மாநகராட்சி 179வது வார்டு திருவான்மியூர் பகுதியில், அ.தி.மு.கவை சேர்ந்த ஒரு நபரும், பெண் ஒருவரும் சேர்ந்து கையில் வாக்குச்சீட்டுடன் பணம் பட்டுவாடா செய்து கொண்டிருந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் அங்கிருந்த பறக்கும்படையினரிடம் தகவல் தெரிவித்தனர்.

தேர்தல் பறக்கும்படையினர் வருவதை பார்த்த அ.தி.மு.க-வினர் கையில் வைத்திருந்த பணம் மற்றும் வாக்குச்சீட்டை கீழே வீசி விட்டு தப்பித்து ஓடினர். இதில் கலா என்ற அ.தி.மு.க பெண் நிர்வாகியை போலிஸார் தப்பி ஓடும்போது கையும் களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)