ஹிஜாப் அணிந்து வந்த வாக்காளருக்கு எதிர்ப்பு - பாஜக பிரமுகர் வெளியேற்றம்

 


தமிழகத்தில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் இருக்கின்றன. இவற்றில் மொத்தமாக 12,838 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெறகிறது. இதற்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் 8ஆவது வார்டுக்கு உட்பட்ட அல் அமீன் மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக முகவர் வெளியேற்றப்பட்டார்.

வாக்காளர் ஹிஜாப் அணிந்து வந்ததற்கு பாஜக பிரமுகர் கிரி என்பவர் எதிர்ப்பு தெரிவித்தார். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகளிடம் அதிமுக, திமுக முகவர்கள் புகார் தெரிவித்ததால் பாஜக பிரமுகர் கிரி வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை