பழிவாங்கும் செயல்.. எங்க கூட்டிட்டு போனாங்கன்னு தெரியல..- கதறி அழும் மாஜி அமைச்சர் ஜெயக்குமார் மனைவி ..
சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்த 30-40 போலீசார் , லுங்கியை கூட மாற்றவிடாமல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை அழைத்துச் சென்றுவிட்டதாக அவரது மனைவி ஜெயக்குமாரி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரம் பகுதி 49-வது வார்டில் திமுக-வை சேர்ந்த நபர் கள்ள ஓட்டுப்போட வந்ததாகக் கூறி அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் பலர் அந்த நபரை அரை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்று காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதைத்தொடர்ந்து, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அ.தி.மு.க நிர்வாகிகள் 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல்துறை வழக்கு பதிவு செய்தது. 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த அவரது மனைவி ஜெயக்குமாரி, சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது 30 - 40 காவல் துறையினர் கதவை திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததாக தெரிவித்தார்.
லுங்கியை கூட மாற்றவிட்டு பேண்ட் அணிந்து வருவதாக கூறுயூம் காவல் துறையினர் அதனை ஏற்காமல் அழைத்துச் சென்றுவிட்டதாக அவரது மனைவி ஜெயக்குமாரி கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார்.
கள்ள ஓட்டு போட்டதை தடுத்தது ஒரு தவறா என்றும், கள்ள ஓட்டு போட்டதை தட்டிக் கேட்டதற்கு இதுதான் நிலைமையா?? எனவும், 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யபட்டிருப்பதாக கூறிகிறார்கள் அதுபற்றி எங்களுக்கு ஒன்றும் தெரியவில்லை.
எதற்காக இப்படி செய்கிறார்கள் என்று தெரியவில்லை எனக் கூறிய அவர்,40 போலீஸார் வந்ததாகவும், ஒருவரை பிடிக்க 40 பேரா எனக் கேள்வியெழுப்பினார். அவரை கைது செய்து தனியாக அழைத்துச் சென்றது கவலையாக இருக்கிறது. எங்கே அழைத்துச் சென்றார்கள்.. என்ன செய்யப்போகிறார்கள் என எதுவுமே தெரியவில்லை என அவர் கண்ணீர் மல்க கூறினார்.