போலீஸ் ஸ்டேஷன் வாசலில் மோதிக் கொண்ட வியாபாரிகள் : செய்வதறியாது திகைத்த போலீஸ் !!

 


புதுச்சேரி வாணரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கவுசல்யா, (31) இவர் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவில் வாசலில் பூ விற்று வருகிறார், இதே போல் உப்பளம் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் வள்ளி, 46; இவர், சோளம் விற்பனை செய்கிறார். இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது,  இந்நிலையில் இரவு கவுசல்யா, வள்ளி இருவரும் மீண்டும் தகராறில் ஈடுப்பட்டுள்ளனர். 

இதை அறிந்த வள்ளிக்கு ஆதரவாக அவரது மகன் துளசி மற்றும் சில வாலிபர்களும், கவுசல்யாவுக்கு ஆதரவாக அவரது சகோதரர் நாராயணன் மற்றும் சில வாலிபர்கள் வந்தனர். இரு தரப்பும் மணக்குள விநாயகர் கோவில் அருகே மோதி கொண்டனர் அப்போது விற்பனைக்கு வைத்திருந்த பொருட்களை சாலையில் கொட்டி வீசினர். 

இரு தரப்பில் காயமடைந்தவர்கள் ரத்தம் சொட்ட சொட்ட பெரியக்கடை போலீஸ் நிலையம் சென்றனர். காவல் நிலையத்தில் 2 காவலர்கள் மட்டுமே பணியில் இருந்ததால், இரு தரப்பும் போலீஸ் நிலையம் எதிரே கற்கலை வீசி தாக்கி கொண்டனர். இதில், துளசியின் மண்டை உடைந்தது. போலீஸ் நிலையத்திற்கு உள்ளே அழைத்து செல்லப்பட்ட இரு தரப்பும் மீண்டும் மோதி கொண்டது.