“தேர்தல் ஆணையம் திமுக அரசின் கைப்பாவையாக செயல்படுகிறது” - அமைச்சர் ஜெயக்குமார்

 





சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அதிமுக நிர்வாகிகள் இன்று மாலை சந்தித்து பேசினார். அப்போது, மாநில தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டு சுமத்தி மனு கொடுத்தனர். மாநில தேர்தல் ஆணையம் திமுக அரசின் கைப்பாவையாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சிகளின் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. இதற்கிடையில் ஆங்காங்கே வேட்பாளர்கள் கட்சி தாவும் நிகழ்வுகளும் நடைபெற்று வருகின்றன. இதில் குதிரை பேரம் ஒருபுறமும், மிரட்டல்களும்  நடைபெறுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், அதிமுக நிர்வாகிகள் இன்று கவர்னர் ஆர்.ரவியை சந்தித்து மனு கொடுத்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள  ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் அதிமுக நிர்வாகிகள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்பட சிலர் சந்தித்து பேசினார். அப்போது,  நகர்ப்புற தேர்தலில் வீதி மீறல் நடைபெறுவதாக வும், மாநில தேர்தல் ஆணையம் திமுக அரசுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தேர்தல் விதிமீறல் குறித்து ஒட்டு மொத்தமாக தொகுத்து ஆளுநரிடம் கொடுத்துள்ளோம் என்று கூறியதுடன், சுதந்திரமாக, ஜனநாயக ரீதியாக தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேரும், காவல்துறையை வைத்து வேட்பாளர்களையும், நிர்வாகிகளையும் திமுக அரசு மிரட்டுவதாக புகார் கூறியவர், தேர்தல் ஆணையம் திமுகவின் கைப்பாவை யாக செயல்படுகிறது என்றும் குற்றம்சாட்டினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்