வசமாக சிக்கிய திமுக நிர்வாகிகள்.. 3 பேரை கைது செய்த தேர்தல் பறக்கும் படை!!

 


கோவை : வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் சுற்றிவளைத்த பாஜகவினர் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்தனர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளை காண தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் , வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் மற்றும் பணம் வினியோகம் செய்வதில் , அதிமுக மற்றும் திமுக வினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சியின் உடைய 70வது வார்டுக்குட்பட்ட , தெப்பக்குள மைதானம் மற்றும் சுக்ரவார் பேட்டை பகுதிகளில் , திமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வருவதாக வந்த தகவலைத் தொடர்ந்து, அங்கு விரைந்த பாஜகவினர், பணம் வினியோகம் செய்த 6 பேரில், மூன்று பேரை சம்பவ இடத்திலேயே சிறைப்பிடித்தனர்.

இதுகுறித்து உடனடியாக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளுக்கு, தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, அங்க வந்த அதிகாரிகள், சிறைப்பிடிக்கப்பட்ட திமுகவை சேர்ந்த மூன்று பேரை மீட்டதோடு , அவர்களிடமிருந்து கட்டுக்கட்டாக பணத்தை பறிமுதல் செய்தனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)