21- ஆண்டுகளுக்குப் பின் பெண் காவலர் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்க உதவிய அமைச்சு பணியாளருக்கு பாராட்டு.

 


திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 2001-ம் ஆண்டு பெண் காவலராக சண்முகவள்ளி என்பவர் மாவட்ட ஆயுதப்படையில் பணியாற்றினார். அப்போது பணியில் இருக்கும் போதே பெண் காவலர் மரணமடைந்து விட்டார். அவரின் குடும்பத்திற்கு கடந்த 21-ஆண்டுகளாக குடும்ப ஓய்வூதியம் கிடைக்கப்பெறாமல் இருந்து வந்த நிலையில் மேற்படி பெண் காவலரின் மகள் செல்வி.ஆர்தர்ஷி, என்பவர் திருநெல்வேலி மாவட்ட காவல் அலுவலகத்தில்  மனு அளித்திருந்தார்.

மேற்படி மனு மீது தனி கவனம் செலுத்தி பெண் காவலர் குடும்பத்திற்கு  ஓய்வூதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க  உத்தரவிட்டதன் பேரில் நிர்வாக அதிகாரி திருமதி.தரணி, அவர்கள் வழிகாட்டுதலின் படி கண்காணிப்பாளர் திருமதி.காளீஸ்வரி,உதவியாளர்.திருமதி காந்திமதி, ஆகியோர் தீவிர முயற்சியில் அப்பெண் காவலரின் குடும்பத்திற்கு ஓய்வு ஊதியம் கிடைக்க பெற செய்தனர். இதற்கான ஆணையை இன்று *மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் திரு.ப.சரவணன், இ‌கா.ப அவர்கள்,பெண் காவலரின் மகள் செல்வி. ஆர்தர்ஷியிடம் இன்று வழங்கினார்.

21-ஆண்டுகளுக்கு‌ பிறகு பெண் காவலர் குடும்பத்திற்கு குடும்ப ஓய்வூதியம்  கிடைக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்ட கண்காணிப்பாளர் திருமதி.காளீஸ்வரி, உதவியாளர் திருமதி.காந்திமதி அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ப.சரவணன், இ.கா.ப.,அவர்கள்., வெகுவாக பாராட்டி பரிசு வழங்கினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)