மாணவர்களுக்கு போதையேற்றிய கில் ‘லேடிகள்’ கைது-1.250 கிலோ கஞ்சா பறிமுதல்

 


திருச்சுழி அருகே மாங்குளம் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து போதையேற்றிய 3 கில்லேடி பெண்கள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து ஒன்றே கால் (1.250) கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே மாங்குளம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா விற்பனை செய்யப் படுவதாக,எம்.ரெட்டியபட்டி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் காவல் சார்பு ஆய்வாளர் ராமநாதன்தலைமையிலான போலீசார் மாங்குளம் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, மாங்குளம் மாரியம்மன் கோயில் பின்புறம் சந்தேகப்படும்படியாக நின்ற 3 பெண்களை விசாரணை செய்தபோது அவர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மீனாட்சி, தடாகை நாச்சியார், சமுத்திரவள்ளி ஆகிய மூன்று பெண்களை கைது செய்த போலீசார், அவர்கள் வீட்டில் நடத்திய சோதனையில் விற்பனைக்கு வைக்கப்பட்டி இருந்த ஒன்றே கால் (1.250) கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக, வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்ட மூன்று பெண்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும்,கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்ட 3 பெண்கள் மீதும் ஏற்கனவே பல்வேறு கஞ்சா வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்: அ.மணிகண்டன்- 

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)