ஒமிக்ரான் சிறப்பு வார்டாக மாறும் பழைய துறைமுக வளாகம் : முதலமைச்சர் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு

 


புதுச்சேரி: புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஒமிக்ரான் சிறப்பு வார்டு அமைக்க முதலமைச்சர் ரங்கசாமி, சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

நாடு முழுவதும் ஒமிக்ரான் பரவி வருகிறது. ஒமிக்ரான் பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதே நேரத்தில் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாக வார்டுகளை அமைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனைத்தொடர்ந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி பழைய துறைமுக வளாகத்தில் உள்ள குடோன்களை ஆய்வு செய்தார்.

அங்குள்ள குடோன்கள் ஏற்கனவே சீரமைக்கப்பட்டு வருகிறது. அங்கு ஒமிக்ரானுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் 400 படுக்கை வசதிகள் அமைக்க முடியுமா..? என ஆய்வு செய்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், ஒமிக்ரான் சிகிச்சை மையத்திற்கு அரசு சார்பில் தேவையான படுக்கைகள் மருந்துகள் தயார் படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. அதற்கான இடங்களை பார்த்து வருகிறோம், பழைய துறைமுகம், நவீன மீன் அங்காடி மையம், லாஸ்பேட்டை சமுதாய கூடம் உள்ளிட்ட இடங்களில் படுக்கை தயார் செய்ய பார்வையிடபட்டு வருகின்றது என்று தெரிவித்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)