லாரி ஓட்டுநர் மீது கண்மூடித்தனமாக தாக்குதல் : போக்குவரத்து உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் : மாவட்ட எஸ்பி அதிரடி நடவடிக்கை

 
திருச்சி: திருச்சி அருகே லாரி ஒட்டுநரை தாக்கிய சமயபுரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வராஜை சஸ்பெண்ட் செய்து திருச்சி மாவட்ட எஸ்பி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையிலிருந்து திருச்சி திருவரம்பூர் பிஹெச்இஎல் நிறுவனத்திற்கு இரும்புகளை லாரியில் ஏற்றி வந்த போது சமயபுரம் சுங்கசாவடியில் லாரி ஓட்டுநர் ஆயரசனிடம் சமயபுரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வராஜ் , பர்மிட், பில், தாபல் கேட்டுள்ளார். 

இதனை லாரி ஓட்டுநர் தர மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் லாரி ஓட்டுநர் ஆயரசனை போக்குவரத்து உதவி ஆய்வாளர் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த லாரி ஓட்டுநர் சிகிச்சைக்காக திருச்சி சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதனையறிந்த மற்ற லாரி ஓட்டுநர்கள் சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுனர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதன் அடிப்படையில் சாலை மறியல் போராட்டம் கைவிட்டனர். இதனால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே சமயபுரம் போக்குவரத்து உதவி ஆய்வாளர் செல்வராஜை திருச்சி மாவட்ட ஆயுதபடை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அதன்பின்னர் திருச்சி மாவட்ட எஸ்பி உதவி ஆய்வாளர் செல்வராஜை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)