ஃப்ளூரோனாவாக மாறிய கொரோனா; ஒமைக்ரானுக்கு இடையே பரவும் புதிய வகை கோவிட் - எங்கு தெரியுமா?

 


கொரோனா தொற்றால் படிப்படியாக மீண்டு வந்த உலக நாடுகள் தற்போது மரபணு மாற்றம் அடைந்த ஒமைக்ரான் வகை கொரோனாவிடம் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன.

பிரிட்டன், அமெரிக்காவில் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தத்தம் நாட்டு அரசுகள் மீண்டும் பொதுமுடக்கத்தை நோக்கி பயணிக்கின்றன.

இந்த நிலையில், இஸ்ரேல் நாட்டில் கொரோனா வைரஸின் புதுவகை தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, மத்திய இஸ்ரேலில் உள்ள பெட்டாச் டிக்வா என்ற பகுதியில் உள்ள பெய்லின்சன் மருத்துவமனையில் பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்கு புது வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அது கொரோனாவும் ஃப்ளுவென்சாவும் சேர்ந்து ஃப்ளூரோனா என்ற புது வகை கொரோனா அந்த பெண்ணுக்கு இருப்பது உறுதிபடுத்தப்பட்டிருக்கிறது. தடுப்பூசிகள் ஏதும் செலுத்திக்கொள்ளாத அந்த பெண்ணுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டதில் வைரஸ் தொற்றில் இருந்து அவர் குணமாகியிருக்கிறாராம்.

இருப்பினும் கொரோனாவுடன் ஃப்ளூவும் இணைந்துள்ளதால் இதனால் தொற்று ஏற்படுவோருக்கு நிமோனியா உள்ளிட்ட மேலதிக பாதிப்புகள் வரக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வகை கொரோனா குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)