புத்தாண்டில் புதிதாக ஒரு கலையை இளைஞர்கள் கற்க வேண்டும் : தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வலியுறுத்தல்

 


சென்னை : இந்த புத்தாண்டில் இளைஞர்கள் புதிதாக ஒரு கலையை கற்க வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது ;- அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த புத்தாண்டு மிகவும் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன். கடந்த ஆண்டு என்னவெல்லாம் செய்தோம். எதையெல்லாம் செய்ய தவறவிட்டோம். புதிய ஆண்டில் என்னவெல்லாம் செய்ய வேண்டும். என்னென்ன பழக்கங்களை புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும்.

என்னென்ன பழக்கங்களை கைவிட வேண்டும் என்று சிந்திக்கக் கூடிய நாள் தான் இந்த புத்தாண்டு. இளைஞர்களை பொறுத்தவரை இந்த புத்தாண்டில் ஒரு செய்தி இருக்கிறது. உங்களிடம் ஒரு கேள்வி. நடந்த முடிந்த புத்தாண்டில் தொழில் ரீதியாக என்ன கற்றுக் கொண்டீர்கள்? ஏதாவது ஒரு வித்தையை கற்றுக் கொண்டீர்களா? ஏதாவது ஒரு நூல் படித்தீர்களா? புதிய மொழியை கற்றுக் கொண்டீர்களா? இளைஞர்கள் ஏதாவது ஒரு கலையை கற்றுக் கொள்ள வேண்டும், எனக் கூறினார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

“பொதுமக்களிடம் காவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்” -தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு

ஸ்ரீ பாலாஜி பவன் ஹோட்டல் ஒன்றில் வாங்கப்பட்ட சைவ உணவில் இறந்த எலியின் தலை அசைவமாக மாறிய அதிர்ச்சி சம்பவம்