தெருக்கூத்து கலைஞர்களை கௌரவப்படுத்தி விஜய் சேதுபதி காலண்டர் வெளியீடு : பல அவதாரங்களில் அசத்தல்!
தமிழ்நாட்டின் தொன்மைகளில் ஒன்று தெருக்கூத்துக் கலை. பல நூற்றாண்டு கால வரலாற்றை கொண்ட ஒருகலையென்றால் அது, தெருக்கூத்து கலையையே சாரும். இத்தகைய கலை வடிவங்கள் சமீபகாலத்தில் குறைய தொடங்கியிருந்தாலும், தன் தொன்மையை அழிவின் விழிம்பில் இருந்து காக்கும் பொறுப்புடன் பல நாடகக் கலைஞர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக தெருக்கூத்து கலைஞரின் வாழ்வாதாரம் பெரும் கேள்விகுறியாகியுள்ள நிலையில், தமிழ்நாடு அரசு நலிவடைந்து இருக்கும் தெருக்கூத்து கலைஞர்களுக்கு அரசாங்கம் மாதந்தோறும் நிதி உதவி அளித்தும், அத்தகைய கலையை அரசு நிகழ்ச்சிகளில் இடம்பெறச் செய்யும் பணியை ஆணியிட்டுள்ளது.
இந்நிலையில், புகைப்படக் கலைஞரான முனைவர் எல். ராமச்சந்திரன் என்பவர் தெருக்கூத்து கலைஞர்களை பாதுகாத்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த சர்வதேச தரத்துடன் புகைப்பட கோர்வையை உருவாக்கியிருக்கிறார்.
சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி பிறகு தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத கதாநாயகனாக மக்கள் மனதில் பதிந்திருப்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு நிகரான இடத்தில் தன்னை நிலைநிறுத்தி வைத்திருக்கிறார். நாடகங்களை பெரிதாக பின்பற்றும் நடிகர்களில் இவரும் ஒருவர். இவர் சில படங்களில் நாடக கலைஞராகவும் கதாபாத்திரங்களில் தோன்றி அசத்தியிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது முனைவர் எல். ராமச்சந்திரன் நடிகர் விஜய் சேதுபதி விஜய் சேதுபதி உருவாக்கிய “விஜய் சேதுபதி தெருக்கூத்து கலைஞன்” என்ற பெயரில் 2022-ம் ஆண்டிற்கான காலண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலண்டரை இயக்குனர் சீனு ராமசாமி வெளியிட்டிருக்கிறார். இந்த தெருக்கூத்து கலைஞன் காலண்டர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.