திண்டுக்கல்லில் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியான விவகாரம் : 5 தனிப்படைகளை அமைத்து தீவிர தேடுதல் வேட்டை!!
திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் வாலிபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு மரியநாதபுரம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவர் அப்பகுதியில் உள்ள செட்டி குளத்தை மீன் குத்தகைக்கு எடுத்து வர்த்தகம் செய்து வருகிறார்.
இவருடைய மகன் ராகேஷ் (வயது 26), நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் செட்டிகுளம் அருகே நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென ராகேஷ் மீது துப்பாக்கி நடத்தினர்.
இதனால், படுகாயமடைந்த அவரை நண்பர்கள் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து குற்றவாளிகளை பிடிக்க ஏ.டி.எஸ்.பி.அருண் கபிலன் தலைமையில் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள், மற்றும் காவலர்கள் கொண்ட 5 தனிப்படையினர் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தனிப்படையினர் மரியநாதபுரம் பகுதிகளில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்து வருகின்றனர். மேலும் உயிரிழந்த வாலிபரின் நண்பர்கள் உறவினர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்