பஸ்களில் பெண்கள் மீது தொடரும் வன்முறை... டிரைவருக்கான பொறுப்புகள் வரையறை...


 பேருந்துகளில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் வன்முறையை தடுக்க ஓட்டுநருக்கான பொறுப்புகளை வரையறை செய்து வரைவு சட்டத்திருத்தத்தை தமிழ்நாடு அரசு கொண்டுவந்துள்ளது. அண்மை காலமாக பேருந்துகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற குற்றங்களை தடுக்க நடத்துனருக்கான பொறுப்புகள் வரையறுக்கப்பட்டுள்ளன.

அதன்படி, பேருந்தில் பயணிக்கும் ஆண் பயணிகள், பெண் பயணிகளுக்கு எதிராக பாட்டு பாடுதல், தவறான வார்த்தைகளை பேசுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால், ஓட்டுநர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் அவர்கள் மீது புகார் அளிக்கலாம்.

சரியான காரணங்கள் இருப்பின், வாகனத்தை விட்டு கீழே இறக்கிவிட ஓட்டுநர், நடத்துனருக்கு அதிகாரம் வழங்கப்படுவதாகவும் அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பேருந்தில் ஏற்படும் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் தொடர்பாக புகார் தெரிவிக்க ஏதுவாக பேருந்துகளில்  புகார் புத்தகம் வைக்கப்பட வேண்டும் என திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இதுத்தொடர்பான கருத்துகளை தலைமை செயலகத்தில் உள்ள உள்துறை செயலருக்கு தெரிவிக்கலாம் எனவும் அரசிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா