மாணவன் மர்ம மரணம் - காவல் நிலையத்தை ஆய்வு செய்த தென்மண்டல ஐஜி


 விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு மர்மமான முறையில் உயிரிழந்த கல்லூரி மாணவனை விசாரணை செய்த காவல் நிலையத்தை தென்மண்டல ஐஜி நேரில் சென்று ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன் கீழத்தூவல் காவல் நிலையத்திலிருந்து நடத்தப்பட்ட வாகன சோதனையில் நிற்காமல் சென்றதால் அவரை பின்தொடர்ந்து சென்ற போலீசார், பிடித்து விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

இந்த நிலையில் கல்லூரி மாணவர் மணிகண்டன் வீடு திரும்பிய நிலையில் வீட்டில் மர்மமான முறையில் கடந்த 5ஆம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடலுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி மறு உடற்கூறு ஆய்வு நேற்று நடைபெற்றுது. இதையடுத்து உயிரிழந்த மணிகண்டனின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட காவல் நிலையமான கீழத்தூவலுக்கு வருகை தந்த தென் மண்டல ஐஜி அன்பு, அங்குள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். பின்னர், அங்கு பணியாற்றும் போலீசார்களிடம் ஒருமணி நேரம் விசாரணை நடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா