நெருக்கடியால் தற்கொலை..? ரயில் முன் தலையை கொடுத்த யூனியன் பொறியாளர்…

 


நெல்லை மாவட்டத்தில் உள்ளது ராதாபுரம் யூனியன். இந்த யூனியனுக்கு உட்பட்டது கஸ்தூரிரெங்கபுரம் பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்தில் அரசு பணிகள் செய்யப்பட்டதாகவும், அதற்காக போலியாக செலவு பில்கள் தயாரிக்கப்பட்டு லட்சக்கணக்கான பணம் கையாடல் செய்யப்பட்டதாக சர்ச்சை வெடித்தது.

இந்த மோசடி பணத்தை அரசு ஒப்பந்ததாரர்கள் இசக்கிமுத்து, சுப்பையா என்ற இருவரின் வங்கிக்கணக்கில் வரவு வைக்க பஞ்சாயத்து செயலாளர் பாலசுப்ரமணியன் என்பவர் முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து புகார் கலெக்டரிடம் போய் சேர உடனடியாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

ஒரு பக்கம் விசாரணை நடந்து கொண்டிருக்க மறுபக்கம் பஞ்சாயத்து செயலாளர் பாலசுப்ரமணியன் அதிரடியாக சஸ்பென்ட் செய்யப்பட்டார். ஆனால் அவரை மீண்டும் பணியில் அமர்த்தி காசு பார்க்க ஒப்பந்ததாரர்கள் ஆளும்கட்சி பிரமுகர்கள் மூலம் முயற்சித்ததாக தகவல்கள் வெளியாகின.

நிலைமை இப்படியிருக்க, தற்போது ராதாபுரம் பஞ்சாயத்து ஒன்றியத்தின் பொறியாளர் சந்தோஷ்குமாரை ஆளுங்கட்சி பிரமுகர் அணுகியதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பழைய ஒப்பந்த பணிகளை செய்ததற்காக பணத்தை தங்கள் கணக்கில் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும் என்றும், அதற்காக போலியாக ரசீதுகளை தயாரிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததாக தெரிகிறது.

போலி ரசீது தயாரிக்க உடன்பட சந்தோஷ்குமார் மறுக்க, ஆளும்கட்சி பிரமுகர்கள் தரப்பில் இருந்து நெருக்கடி உச்சத்துக்கு போனதாம். தொடர்ந்து மிரட்டல், மன உளைச்ச்லில் அவர் இருந்து வந்ததாக உடன் பணியாற்றியவர்கள் கூறி உள்ளனர்.




இந் நிலையில், இன்று மதியம் 2 மணி அளவில் மதிய உணவருந்த அலுவலகத்தில் இருந்து சந்தோஷ்குமார் சென்றிருக்கிறார். அப்போது அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்ததாகவும், பில் செட்டில்மெண்ட் பற்றி ஆளும்கட்சி முக்கிய பிரமுகர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

அந்த செல்போன் அழைப்பை அட்டென்ட் பண்ணி பேசி கொண்டே இருந்த சந்தோஷ்குமார், காவல்கிணறு பகுதியில் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் அவ்வழியே வந்த திருவனந்தபுரம் – திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். பொறியாளர் சந்தோஷ்குமார் மரணத்தின் பின்னணியில் ஆளும்கட்சியினர் அதிகார போக்கும், மிரட்டல்களும் இருப்பதாக அதிமுக குற்றம்சாட்டி உள்ளது.



மேலும் தற்கொலைக்கு முன்பாக சந்தோஷ்குமாருடன் பேசியது யார்? என்ன விவரங்கள் பேசப்பட்டன? என்பது குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)