சப் இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்த முயற்சி - தப்பியோடி தாழ்ப்பாள் போட்டதால் உயிர் தப்பியது

 


தஞ்சாவூர் மாவட்டம், கல்லணை சுக்காம்பார் பாலத்தின் அருகில், ஒரு மோட்டார் சைக்கிளில்  4 பேர் சுமார் ஒன்றரை மணி நேரம்  அப்பகுதியில் சுற்றி வந்துள்ளனர். இதனையறிந்த அப்பகுதியை சேர்ந்தவர்கள், மர்மமான முறையில் நான்கு பேர் சுற்றி திரிந்து வருவதாக தோகூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தோகூர் போலீசார், அப்பகுதிக்கு வந்த போது, ஒரு பைக்கில் வந்த நான்கு பேரும் சென்று விட்டனர். பின்னர் புதுஆற்றுப்பாலம் அருகில் தோகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அய்யாபிள்ளை மற்றும் எஸ்எஸ்ஐ வேல்முருகன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் வாகன தனிக்கையில் இருப்பதையறிந்த அவர்கள், போலீசாரை ஏமாற்றும் விதமாக, ஒருவர் மட்டும் வாகனத்தை ஒட்டி வர மற்ற மூன்று பேரில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.

சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்து நான்கு விசாரனை செய்த போது அவர்கள் போதையில் இருப்பதும், திருவெறும்பூர்,  பெல்டவுன் சீப் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் மகன் நரேஷ்ராஜு (28),  துவாக்குடி, அண்ணாவளைவு பகுதியை சேர்ந்த ஜான் போஸ்கோ மகன் ரூபன் (21), துவாக்குடி, அண்ணா வளைவு இந்திரா தெருவை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் வினீத் (21), துவாக்குடி அண்ணா வளைவை சேர்ந்த  பாண்டியன் மகன் சாந்தகுமார் (21) என்பதும்  தெரியவந்தது. இவர்கள் 4 பேரும் லால்குடி அருகே உள்ள அரியூர் பகுதிக்குச் சென்று  வந்ததாகவும் கூறி தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் போலீசார், நான்கு பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, வாகனத்தில் இருக்கும் பைகளை எடுத்து வர கூறி, அதில் உள்ள பொருட்களை பார்த்து கொண்டிருந்தார்.  பின்னர், அவர்களிடமிருந்த செல்போனை வாங்கி பார்த்து கொண்டிருந்த போது,  ரூபன், பையில் வைத்திருந்த பொருளை எடுத்து கொண்டு திடிரென நான்கு பேரும் தப்பி ஒடினர். அப்போது உதவி ஆய்வாளர் அய்யாப்பிள்ளை, எஸ்எஸ்ஐ வேல்முருகன் மற்றும்  இரண்டு பெண் காவலர்கள் மட்டும் இருந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த உதவி ஆய்வாளர் அய்யாப்பிள்ளை மற்றும் போலீசார், தப்பியோடும் நான்கு பேரை பிடிக்க முயன்ற போது, ரூபன், தான் வைத்திருந்த கூர்மையான கத்தி போல் உள்ள ஆயுதத்தால், உதவி ஆய்வாளர் அய்யாப்பிள்ளையை குத்த முயன்றார். இதனால் உயிருக்கு பயந்த உதவி ஆய்வாளர் அய்யாப்பிள்ளை, காவல் நிலையத்திலுள்ள அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டார். பின்னர் பெண் போலீசார் காவல் நிலையத்திற்குள் சென்று மற்றொரு அறையின் கதவினை தாழிட்டு கொண்டு விட்டனர

ஆனால் ஆத்திரமடங்காத ரூபன், கத்தியால், உதவி ஆய்வாளர் அய்யாப்பிள்ளை உள்ள அறையின் கதவினை பலமாக குத்தி விட்டு தப்பியோடி விட்டார்கள். இந்த சம்பவத்தின் போது, அவர்களிடமிருந்து மூன்று கத்திகள் கீழே விழுந்தன. அதற்குள் சத்தம் கேட்டு, காவல் நிலையம் முன்பு கிராம மக்கள் கூடினர்.அப்போது, அனைவரும் சென்றிருப்பார்கள் என எண்ணத்தில், நரேஷ்ராஜீ, காவல் நிலையத்தில் உள்ள மோட்டார் சைக்கிளை  எடுக்க வந்த பொழுது கல்லணையில் உள்ள கிராம மக்கள் உதவியுடன் தோகூர் போலீசார் நரேஷ் ராஜுவை கைது செய்தனர். மேலும் அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அந்த வண்டியில் இருந்து 3 ஆடு உரிக்கும் கத்தி போல் உள்ள வாள்களை பறிமுதல் செய்தனர்.

தப்பியோடி மூன்று பேரும் இரும்பு ராடு மற்றும் வாலுடன் தப்பி சென்றுவிட்டனர். சம்மதப்பட்ட 4 பேரின் பெற்றோருக்கு தோகூர் போலீசார் தகவல் கொடுத்துள்ளனர். நரேஷ்ராஜுவின்  பெற்றோர்,  வினித் தாய் தோகூர் காவல் நிலையம் வந்தனர்.  அவர்களிடமும் தோகூர் போலீசார் விசாரனை செய்து வருகின்றனர். இதனால் தோகூர் காவல்நிலைத்தில் பெரிய பரபரப்பு ஏற்பட்டது.  இதில் நரேஷ்ராஜூவை கைது செய்து தப்பியோடிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.நான்கு பேரும் குத்த முயன்ற போது, உதவி ஆய்வாளர் அய்யாப்பிள்ளை தப்பியோடி வராவிட்டால், கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஆடு திருடர்களால்  ஒரு சிறப்பு உதவி ஆய்வாளர்  படுகொலை செய்யப்பட்ட நிலையில் தோகூர் போலீசாருக்கும் ஏற்பட்டிருக்கும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.உதவி ஆய்வாளரை தாக்கிய சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)