இந்துவாக மதம் மாறிய முஸ்லீம் வக்ஃபு வாரிய முன்னாள் தலைவர்… அதிர்ச்சியில் இஸ்லாமிய அமைப்புகள்..!!
ஷியா முஸ்லீம் வக்ஃபு வாரிய முன்னாள் தலைவர் வசீம் ரிஜ்வீ இந்து மதத்திற்கு மாறியது உத்தரபிரதேச முஸ்லீம் அமைப்புகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் பெரும்பான்மையான இஸ்லாமிய சமூகத்தின் ஷியா பிரிவின் முக்கிய தலைவராக பார்க்கப்பட்டவர் வசீம் ரிஜ்வீ. இவர், ஷியா வக்ஃபு வாரியத்தின் தலைவராகவும் வகித்து வந்தார். இந்து அமைப்புகள் மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக தொடர்ந்து கருத்துக்களை கூறி வந்தார். அதோடு, அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்றும் குரல் கொடுத்தார்.
இந்துக்களு ஆதரவாக பேசி வந்ததால், சன்னி பிரிவு முஸ்லீம்கள் ரிஜ்வியை இஸ்லாமியர் அல்லாதவர் எனப் பத்வா அளித்திருந்தனர். மேலும், ஷியா பிரிவு முஸ்லீம்களும் அவரை வெறுக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத நிலையில், காசியாபாத் மடத்தில் வசீம் ரிஜ்வீ இந்துவாக மதம் மாறினார். அவருக்கு மகாகால் தாஸ்னா கோவில் மடத்தின் அதிபர் மதமாறும் சடங்குகளை செய்து வைத்தார். இந்த சடங்கில் பூணூலும் அணிவிக்கப்பட்டது. மேலும், ஜிதேந்தர் நாராயண்சிங் தியாகி எனப் பெயரும் மாற்றம் செய்து கொண்டார். இதைத் தொடந்து, காவி உடைகள் அணிந்தபடி தாஸ்னா கோவிலில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜையும் செய்தார்.
ஒரு வக்ஃபு வாரிய இஸ்லாமிய தலைவர் முதல்முறையாக இந்து மதத்திற்கு மாறியது இஸ்லாமியர்களிடைடேய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து, மதம் மாறியது குறித்து பேசிய அவர், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இஸ்லாமியர்கள் எனது தலைக்கு சன்மானம் அறிவித்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், எனவே இந்து மதத்திற்கு மாறியதாக கூறினார். மேலும், எனது இந்து மதத்தை நாட்டில் வளர்க்கப் பாடுவேன் என்றும், இந்துக்களுக்கு எதிராக வாக்களிக்கும் இஸ்லாமியர்களை அரசியலில் தோற்கடிப்பேன் எனத் தெரிவித்தார்.