பேருந்தில் இருந்து இறக்கிவிடப்பட்ட குறவர் குடும்பம் - அதிர்ச்சி வீடியோ

 அண்மையில் துர்நாற்றம் வீசுவதாக கூறி மீன்விற்கும் மூதாட்டி ஒருவரை அரசு பேருந்து நடத்துநர் பேருந்திலிருந்து இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று மீண்டும் அதேபோல ஒரு சம்பவம் நிகழந்துள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே குறவர் குடும்பத்தினரை அரசு பேருந்திலிருந்து நடத்துநர் கிழே இறக்கி விட்டு, அவர்களது உடைமைகளையும் தூக்கி வீசியுள்ளார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.