’’குற்றவாளிகளை தேட துப்பாக்கி எடுத்துட்டு போங்க’’- தமிழகத்தை பின்பற்றும் புதுச்சேரி போலீஸ்

 புதுக்கோட்டையில் ஆடு திருடர்களை பிடிக்க சென்ற எஸ்.எஸ்.எஸ். கொள்ளையர்களால் கொள்ளப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்பட்டுத்தி இருந்தது. இந்த நிலையில் குற்றவாளிகளை பிடிக்க செல்லும் காவல்துறையினர் துப்பாக்கியை எடுத்து செல்ல வேண்டும் 

என தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தி இருந்தார். இந்த நிலையில் இதே போன்றதொரு உத்தரவு புதுச்சேரி மாநில போலீசாருக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது. குற்றவாளிகளை பிடிக்க வெளி மாநிலங்களுக்கு செல்லும் போதும், புதுச்சேரியில் ரவுடிகளை பிடிக்க செல்லும் போதும் ரோந்து செல்லும் போதும் போலீஸார் தங்களது பாதுகாப்பிற்காக துப்பாக்கி எடுத்து செல்லலாம் என்று புதுச்சேரி முதுநிலை காவல் கண்காணிப்பாளர் (எஸ்எஸ்பி) லோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை பிடித்து அவர்களிடமிருந்து 36 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.


’’குற்றவாளிகளை தேட துப்பாக்கி எடுத்துட்டு போங்க’’- தமிழகத்தை பின்பற்றும் புதுச்சேரி போலீஸ்


புதுச்சேரியில் கடந்த மூன்று ஆண்டுகளாக லாஸ்பேட்டை உள்ளிட்ட முக்கிய இடங்களில் செயின் பறிப்பு, வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இது மக்களிடையே கடும் பீதியை ஏற்படுத்தியது. இந்த கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் சட்டம் ஒழுங்கு சிறப்பு குற்றபிரிவு குழு ஒன்றை அமைத்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)