பிறந்து சில மணி நேரமே ஆன குழந்தையை மூங்கில் காட்டில் வீசிய அவலம்

 


சீர்காழி அருகே திருமைலாடியில் பிறந்து சில மணி நேரமே ஆன ஆண் குழந்தை மூங்கில் காட்டுப் பகுதியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட அவலம் ஏற்பட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமையிலாடி கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் வயல் பகுதிக்கு சென்றுள்ளனர். அப்போது குடியிருப்பு பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள மூங்கில் காட்டில் குழந்தை அழும் சத்தம் தொடர்ச்சியாக கேட்டுள்ளது.


உடனே கிராமத்தினர் மூங்கில் காட்டுக்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது பிறந்து சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை ரத்தத்துடன் தொப்புள் கொடியோடு முள்ளில் சிக்கி கிடந்துள்ளது. இதையடுத்து அதிர்ச்சியடைந்த கிராமத்தினர் குழந்தையை பத்திரமாக மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்ததுடன் கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து வழக்குப் பதிந்த கொள்ளிடம் போலீசார், விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகள், செல்போன் மூலம் எடுக்கும் வசதி அறிமுகம் - எப்படி டிக்கெட் எடுப்பது ? தெற்கு ரயில்வே விளக்கம்

நெல்லை : எஸ்.ஐ மார்க்கெட் தெரசா தாக்கப்பட்டாரா ........ அறுக்கப்பட்டாரா