விசா கேட்ட பெண்ணிடம் அவதூறாக நடந்து கொண்ட அதிகாரி.. நியூயார்க் இந்தியத் துணைத் தூதரகத்தில் நடந்தது என்ன?


 நியூயார்க்கில் இந்தியத் துணைத் தூதரகம் உள்ளது. இங்கு கடந்த நவம்பர் மாதம் இந்தியப் பெண் ஒருவர் வந்துள்ளார். அப்போது அவர், இந்தியாவில் இருக்கும் தனது தந்தை இறந்துவிட்டார் என கூறி விசா விண்ணப்பித்துள்ளார்.

பின்னர் தூதரகத்தில் இருந்த அதிகாரியிடம் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளார். அப்போது அதிகாரி அந்த பெண்ணிடம் கோபமாக நடந்து கொண்டார். மேலும் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே செல்லும் படி ஆவேசமாக கூறியுள்ளார்.

இதனால் பதற்றமடைந்த அந்தப் பெண், தங்களின் ஆவணங்களில் ஏதேனும் பிரச்சனை உள்ளதா என அதிகாரியிடம் கேட்டனர். இதற்கு அவர் எதற்கும் பதில் அளிக்க மறுத்துவிட்டு எழுந்து அறைக்கு சென்றுவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணுடன் வந்த கணவர் வீடியோ எடுத்துள்ளார். இதை தங்களின் சமூக வலைத்தளங்களில் இருவரும் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதை அறிந்த இந்தியத் துணைத் தூதரகம் இது குறித்து விசாரணை நடத்தி, சம்மந்தப்பட்ட அதிகாரி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்