மத்திய பிரதேசத்தில் அமலுக்கு வந்தது இரவு நேர ஊரடங்கு

 ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் மத்திய பிரதேசத்தில் இரவு 11 மணி


முதல் அதிகாலை 5 மணி வரை பொது முடக்கம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று தெரிவித்திருந்தார். அதன்படி பொது முடக்கம் உடனடியாக நேற்றைக்கு இரவே அமலுக்கும் வந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் கண்டறியப்படவில்லை என்றாலும், அண்டை மாநிலமான மகாராஷ்டிரா அதிகம் ஒமைக்ரான் நோயாளிகளை கொண்டுள்ளது. மகாராஷ்ட்ராவிலிருந்து மத்திய பிரதேசம் வருவோர் அதிகம் என்பதால், அவர்கள் தொற்று பரவல் அபாயம் உள்ளதாகக்கூறி, இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கூறினார்.

நாடெங்கும் ஒமைக்ரான் தொற்று அதிகரிக்க தொடங்கிய நிலையில், முதல் மாநிலமாக மத்திய பிரதேசம் பகுதியளவு பொது முடக்கத்தை அமல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இவையன்றி மகாராஷ்டிராவில் ஒமைக்ரான் பரவலை தடுக்க கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தின கொண்டாட்டங்களின் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு இன்று அறிவிக்க உள்ளது. 

இதற்கிடையே நாடெங்கும் ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்துவது குறித்து அனைத்து மாநில சுகாதாரத்துறை செயலாளர்களுடன் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் ஆலோசனை நடத்தியிருக்கிறார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்