பிட்காயினில் முதலீடு என்பது தவறான தகவல் - ரெய்டு குறித்து தங்கமணி பேட்டி

 


பிட்காயினில் முதலீடு என்பது தவறான தகவல் என்றும், தனது வீட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லைஅதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். சென்னை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட தமிழ்நாட்டில் 69 இடங்களில் தங்கமணி தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. கடந்த ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராக தங்கமணி செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தச் சோதனையில் ரூ.2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனை குறித்து நாமக்கல்லில் தங்கமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறுகையில், “அதிமுகவை அழிக்கும் நோக்கில் பழிவாங்கும் நடவடிக்கையாக சோதனை நடத்துகிறார்கள். லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் மூலம் அதிமுகவுக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள். அதிமுகவை அழிக்கலாம் என நினைக்கிறார்கள். அது முடியாது. எனது வீட்டில் இருந்து எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை. இபிஎஸ், ஓபிஎஸ் வழு சேர்க்க கூடாது என்பதற்காக  முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின் உள் நோக்கத்திற்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் உள்ளார்.  அவர் திமுகவில் உள்ளதால் என்னை பழி வாங்கும் செயலில் ஈடுபட்டு உள்ளார். 1000 செந்தில் பாலாஜி வந்தாலும் என்னை ஒன்றும் செய்ய முடியாதுதிமுக தலைவருக்கு செந்தில் பாலாஜி சுயரூபம் தெரியவில்லை. போக போக தெரிந்து கொள்வார்”

மேலும், பிட்காயினில் முதலீடு என்பது தவறான தகவல் என்றும், பிட்காயின் என்னவென்றே தனக்கு தெரியாது என்றும் கூறினார். நீதியின் மீது நம்பிக்கை உள்ளதாகவும், நிச்சயம் வெற்றி பெறுவேன் எனவும் அமைச்சர் கூறினார்.

முன்னதாக, தங்கமணி வீடு மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் ரூ.2.16 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டது. 69 இடங்களில் நடைபெற்று வரும் சோதனையில் கணக்கில்  ரூ.2.37 கோடி, 1.130 கிலோ தங்கம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், 40 கிலோ வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போன்கள், வங்கிகளின், பாதுகாப்பு பெட்டக சாவிகள், கணினி ஹார்டு டிஸ்க்குகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)