டியூசனுக்கு வந்த மாணவியிடம் சில்மிஷம்: சிகிச்சையிலிருந்த வாலிபர் கைது!

 


விழுப்புரம் : கோட்டகுப்பம் அருகே டியூசன் படிக்க சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த வாலிபர் கைது. விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே கோட்டக்குப்பம் காவல் நிலையத்திற்கு சோதனைக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரகுபதி. இவர் மீனவர் ஆவர். அவரது மகன் அசோக் என்கிற மணிமாறன். இவரும் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

இவரது தங்கை அந்த பகுதியை சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கு வீட்டில் வைத்து டியூசன் எடுத்து வருகிறார். ரகுபதி மீன் பிடித்துவிட்டு கரை திரும்பும் போது அலையின் தாக்கத்தால் நிலை தடுமாறி திடீரென படகில் இருந்து விழுந்து விட்டார். எனவே அவர் சிகிச்சைக்காக அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். இவருக்கு துணையாக அசோக்கின் தங்கை, தாய் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று விட்டனர். இந்த நிலையில் வீட்டில் அசோக் மட்டும் தனியாக இருந்தார்.

அப்போது டியூசன் படிப்பதற்காக 4 மாணவிகள் வந்தனர். அவர்களை பார்த்த அசோக் நான் உங்களுக்கு டியூசன் எடுக்கிறேன் என்று கூறினார். அப்போது ஒரு மாணவியை மாடி பகுதிக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சியடைந்த அந்த மாணவி அழுதபடி தனது தாயாரிடம் தெரிவித்தார்.

இது குறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின் அடிப்படையில் கோட்டகுப்பம் அணைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மீனவர் அசோக் என்கிற மணிமாறனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். டியூசன் படிக்க சென்ற மாணவிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பபை ஏற்படுதிள்ளது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)