வீட்டுக் கடன் கேட்ட பெண்ணிடம் லஞ்சம் வாங்கிய கூட்டுறவு வங்கித் தலைவர்: வைரல் வீடியோ

 


ஆத்தூரில் வீட்டு அடமான கடன் கேட்ட கூலித் தொழிலாளி பெண்ணிடம், கூட்டுறவு வங்கித் தலைவர் லஞ்சம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் ராணிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். இவர் கடந்த 10 ஆண்டுகளாக ஆத்தூர் கூட்டுறவு நகர வங்கித் தலைவராக உள்ளார். இந்நிலையில் தம்மம்பட்டி அருகே உள்ள மண்மலை பாலக்காடு பகுதியைச் சேர்ந்த பெண்ணிடம் தனது அலுவலகத்தில் ராமதாஸ் லஞ்சம் பெறும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.