மதுரை போலீசாரால் சித்ரவதை: 4 பேருக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு

 


சென்னை,  மதுரையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் கடந்த 2011-ம் ஆண்டு மர்மநபர்கள் சிலர் பசுவின் தலையை வீசி பெ சென்றனர். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இந்த வழக்கு தொடர்பாக தங்களை துணை போலீஸ் கமிஷனர் தலைமையிலான சிறப்புப்படையினர்கைது செய்து குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி சித்ரவதை செய்ததாகசாகுல் அமீது, அல்ஹஜ், ரபீக் ராஜா, ஷாபின்ஷா ஆகியோர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் மனு தாக்கல் செய்தனர்.

மனுவை விசாரித்த நீதிபதி துரை ஜெயச்சந்திரன், 'சாட்சி யம் மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது மனுதா ரர்களுக்கு எதிராக போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதுதெரிகிறது. எனவே, மனுதாரர்களுக்கு தமிழக அரசு தலா ரூ1 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும். மனுதாரரில்  ஒருவரான சாகுல் அமீது இறந்து போனதால் அவருக்கான இழப்பீட்டு தொகையை அவரது தாயார், மகனிடம் வழங்க  வேண்டும். 

மேலும், மனுதாரர்களால் குற்றம்சாட்டப்பட்டுள்ள சப்-இன்ஸ்பெக்டர்கள் பார்த்திபன், வெங்கட்ராமன்,  சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கணேசன், மோகன், ஏட்டு னார். சங்கரநாராயணன், போலீஸ்காரர் சித்திரவேல் ஆகியோர்'  மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று உத்தர விட்டார்.