“3 ஆண்டுகளில் மட்டும் ரூ.1,700 கோடியை வீணடித்த மோடி அரசு” : எதற்காக தெரியுமா?

 விளம்பரங்களுக்காக மட்டும் கடந்த நான்கு ஆண்டுகளில் ஒன்றிய அரசு ரூ.1,700 கோடி செலவு செய்துள்ளதாக மக்களைவில் ஒன்றிய அமைச்சர் அனுராத் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மக்களவையில் நேற்று ஒன்றிய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக தாக்கூர், "2018ஆம் ஆண்டு முதல்வர் 2021ஆம் ஆண்டு வரை விளம்பரத்திற்காக ரூ.1,698.98 கோடி ஒன்றிய அரசு செலவு செய்துள்ளது.

ஒன்றிய அரசின் கொள்கைகள், திட்டங்கள் குறித்து பயனாளிகள் பயன்பெற வேண்டும், விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதற்காகவே விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

நாளேடுகளுக்கான விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.826.50 கோடி செலவிட்டுள்ளது. அதேபோல் மின்னணு ஊடகங்களுக்கு ரூ.193.52 கோடி செலவு செய்துள்ளது" என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்துக்கு லீவ் எடுக்காம வாங்க : சத்தம் போட்ட பிரதமர் மோடி - யாரை பார்த்துச் சொன்னார் ?