கல்லூரியில் படித்துக் கொண்டே மாணவ மாணவியர்களுக்கு வெகு சிறப்பாக பாடம் சொல்லிக் கொடுத்துக் வரும் அஸ்வினி சுரேசை பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டினர்
வாலாஜாபேட்டை பெல்லியப்பா நகரைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகள் கல்லூரி மாணவி அஸ்வினி சுரேஷ் இவர் ஆற்காடு தனியார் SSS கல்லூரியில் பிசிஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா நோய்தொற்று நிமித்தமாக இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்கள் பெருமளவில் பேரிடரை சந்தித்தது
தமிழ்நாட்டிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது இதனால் பள்ளிகள், கல்லூரிகள் அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு முடங்கிக் கிடந்தன பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் படிப்பு பெருமளவில் பாதிக்கப்பட்டது ஆரம்பப் பள்ளி மாணவர்கள் அடிப்படை கல்வியையே மறந்துவிட்டனர்
இந்த நிலையில் வாலாஜா பெல்லியப்பா நகரில் வசித்து வரும் பொதுமக்கள் அதே பகுதியைச் சேர்ந்த அஸ்வினி சுரேஷ் SSS கல்லூரி மாணவியை அணுகி கொரோனா நோய்த் தொற்றினால் பிள்ளைகள் பள்ளிக்கு போக முடியாமல் அவர்களுடைய படிப்பு மிகவும் பாதிக்கப்பட்டு வருகிறது
எனவே இதே பகுதியில் வசிக்கும் எங்களுடைய பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்க டியூசன் நடத்த கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கடந்த 2020 நவம்பர் மாதம் கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து 30க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அடிப்படைக் கல்வி மற்றும் பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார்
இவர் டியூஷன் சென்டர் (கல்வி மையம்) நவம்பர்
2020-ல்ஆரம்பித்து 2021நவம்பர் முடிவடைந்த நிலையில் ஓராண்டு நிறைவு விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த விழாவில் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டு கல்லூரியில் படித்துக் கொண்டே மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கல்வி கற்று தந்து வந்த கல்லூரி மாணவி
அஸ்வினி சுரேஷ் மற்றும் அவருக்கு உறுதுணையாய் இருந்த அவருடைய தாயார் ரமாதேவியையும் வெகுவாக பாராட்டி சிறப்பித்தனர் தொடர்ந்து இவரின் கல்விப் பணி தொடர வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.