குடிபோதையில் ஆபிசுக்கு வந்த பேரூராட்சி செயல் அலுவலர்.. பணிக்கு சேர்ந்த ஒரு வாரத்திலேயே அலப்பறை…!!!

 


கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் குடிபோதையில் அலுவலத்திற்கு வந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்து உள்ளது வீரபாண்டி பேரூராட்சி. இப்பேரூராட்சிக்கு தற்போது புதிதாக வுருதுநகர் மாவட்டத்தில் இருந்து அசோக்குமார் என்பர் செயல் அலுவலராக கடந்த 1 வாரத்திற்கு முன்பு நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இன்று பேரூராட்சி அலுவலகத்திற்கு அசோக்குமார் குடிபோதையில் வந்ததாக தெரிகிறது. அங்கிருந்தவர்கள் அவரை வெளியில் பொதுமக்கள் பார்க்கிறார்கள் உள்ளே வந்து அமருங்கள் என்று சொல்லியும் அமராமல் போதையிலேயே அவர் வந்த காரை பிடித்தவாரே தள்ளாடியபடி நின்றுள்ளார்.

தொடர்ந்து உள்ளே செல்ல முயன்ற அவர் போதை தலைக்கேரிய நிலையில் அலுவலக வாயில் படியிலேயே அமர்ந்துவிட்டார். இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் அவரை கார் மூலம் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பிவிட்டுள்ளார் அது தற்போது வைரலாக பரவிவருகிறது.