பாஜகவினரை கிழித்து தொங்க விட்ட நெட்டிசன்கள் : காரணம் என்ன?
வட மாநிலங்களில் மேற்கொண்ட அதே ஃபார்முலாவை தமிழ்நாட்டிலும் கொண்டு வர முயற்சிக்கிறது பாஜக.
பொய்களையும், வதந்திகளையும் பரப்பியே ஒன்றியத்தில் ஆட்சியை பிடித்திருக்கும் பாரதிய ஜனதா கட்சி அதே உத்தியை பயன்படுத்தி நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலுமே கால் ஊன்றிட வேண்டும் என்பதற்காக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
அவ்வாறான பொய் புரட்டுகளில் சிக்காமல் தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்கள் சமூக நீதியை காத்து வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்பு அமைந்த அதிமுகவின் அடிமைத்தனமான ஆட்சியால் கடந்த நான்கு ஆண்டுகளில் பாஜக உள்ளிட்ட பொய் பிரசார பேர்வழிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது என சமூக ஆர்வலர்கள் சாடியுள்ளனர்.
இந்த வதந்திகளை பரப்புவதையே முழு நேர வேலையாக கொண்டு பாஜகவினரும் அதனைச் சார்ந்த சில சங்கி குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அவ்வகையில், சென்னை உட்பட மாநிலம் முழுவதும் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையை தற்போது பாஜக கையில் எடுத்து தங்களது விஷம தனத்தை கையாண்டிருக்கிறார்கள்.
அதன்படி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கும் அறிவிப்பு முதற்கொண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவி சங்கவிக்கு வீடு கொடுத்ததாகச் சொல்லி ட்விட்டர் முழுவதும் வாய்க்கு வந்தபடி அள்ளித் தெளித்திருக்கிறார்கள். ஏதே அக்கட்சியின் தொண்டர்கள்தான் இதனை செய்கிறார்கள் என நினைத்திட வேண்டாம்.
ஒட்டுமொத்த வதந்திகளையும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜகவின் மூத்த நிர்வாகிகளே பரப்புகிறார்கள். உண்மை நிலை குறித்து இணையவாசிகள் மேற்கோள் காட்டி ஆதாரத்துடன் நிரூபித்த பின்னும் பொய் பதிவுகளை நீக்காமல் இருக்கிறார்கள்
வட மாநிலங்களில் மேற்கொண்ட அதே ஃபார்முலாவை தமிழ்நாட்டிலும் கொண்டு வர முயற்சிக்கிறது பாஜக. இதனை தமிழக மக்கள் உணர்ந்து இது போன்ற விஷச் செய்திகளை பரப்புவோரிடம் மிகுந்த எச்சரிக்கையுடனே இருக்க வேண்டும் எனவும் இணையவாசிகளும், சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.