குருபூஜையன்று மிஸ்ஸான ஓ.பி.எஸ்:இன்று பசும்பொன்னில் ஆஜர்...!

 


பசும்பொன்னில் உள்ள  தேவர்   நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் பொருளாளரும் ஆன ஓ பன்னீர்செல்வம் இன்று  முத்துராமலிங்க  தேவர் சிலைக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி  மரியாதை செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ,ஆர்.பி.உதயகுமார், நத்தம் விஸ்வநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா  உள்ளிட்டோரும் மரியாதை செய்தனர். ஆண்டு தோறும் அக்.30 ந்தேதி தேவரின் ஜெயந்தி விழாவும், குருபூஜை விழாவும் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு  முத்துராமலிங்க தேவரின் 114 -வது ஜெயந்தி விழாவும்,59வது குரு பூஜையையும் நேற்று முன் தினம்  அக்டோபர் 30 ஆம் தேதியன்று  கொண்டாடப்பட்டது.



குருபூஜையன்று மிஸ்ஸான ஓ.பி.எஸ்:இன்று பசும்பொன்னில் ஆஜர்...!


இதில், பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுகவிலிருந்து பெருந்தலைகள் வரவில்லை அவர்களுக்கு பதிலாக, அதிமுக சார்பில் கலந்து கொண்ட   முன்னாள் வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள்  கூட்டுறதுறை அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர்ராஜா  திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா மற்றும் மாவட்ட செயலாளர் எம்.ஏ.முனியசாமி  உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கழக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அஞ்சலி செலுத்த வராதது அதிமுகவினரிடையே மட்டுமல்ல தேவர் சமுதாயத்தினரிடையேயும் பெரும் அதிர்ப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர்கள் இருவரும் குருபூஜையை புறக்கணித்து விட்டதாக கடும் விமர்சனம் எழுந்தது.



குருபூஜையன்று மிஸ்ஸான ஓ.பி.எஸ்:இன்று பசும்பொன்னில் ஆஜர்...!

ஆனால், 30ஆம் தேதியன்று, சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு கழக இணை ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்வருமான  எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  அதேபோல, பெரியகுளத்தில் உள்ள தேவர் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளரும் பொருளாளருமான  ஓ.பன்னீர் செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதனிடையே, கடந்த 24 ஆம் தேதி பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்கதேவர் உருவச்சிலைக்கு அணிவிக்க தங்கத்தினால் ஆன உலோகத்தினை வங்கியில் இருந்து எடுத்து ஓ.பன்னீர்செல்வம் வழங்கியிருந்தார். தேவர் ஜெயந்தி விழாவில் அவர் கலந்து கொள்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. செப்டம்பர் ஆம் தேதி அவரது மனைவி விஜயலட்சுமி இறந்ததால் 60 நாட்கள் கழித்துதான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும் என்பதால் குருபூஜையில் பங்கேற்றவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.



குருபூஜையன்று மிஸ்ஸான ஓ.பி.எஸ்:இன்று பசும்பொன்னில் ஆஜர்...!


குறிப்பாக, பசும்பொன் கிராமத்தில் தேவர் ஜெயந்தி விழா மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில்,  ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதேபோல் அமைச்சர்களும் மரியாதை செலுத்தினார்கள்.  ஆனால், பசும்பொன்னுக்கு வராத நிலையில், சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார். அ.தி.மு.க.வின் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் பசும்பொன் கிராமத்துக்கு சென்று மரியாதை செலுத்துவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இருவருமே பசும்பொன் கிராமத்துக்கு வரவில்லை, ஓ.பி.எஸ்.சின் மனைவி காலமாகி, 60-வது நாள் அனுசரிக்கப்படுவதினால் அவர் பசும்பொன் செல்லாமல் சொந்த ஊரிலேயே மரியாதை செலுத்தி இருந்தார். இதேபோல் எடப்பாடி பழனிசாமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதால் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இதன் காரணமாக அவரும் பசும்பொன் கிராமத்துக்கு செல்லாமல் சென்னையிலேயே தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தி இருக்கிறார்.


அன்று மிஸ்ஸிங்: இன்று ஆஜர்



குருபூஜையன்று மிஸ்ஸான ஓ.பி.எஸ்:இன்று பசும்பொன்னில் ஆஜர்...!


இந்த நிலையில், இன்று பசும்பொன்னுக்கு வருகை தந்த  அதிமுக ஒருங்கிணைப்பாளரும், பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம்  முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இவருடன்,  முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், செல்லூர் ராஜீ, நத்தம் விஸ்வநாதன், பாஸ்கரன், முன்னாள் எம்பிக்கள் அன்வர்ராஜா, நிறைகுளத்தான்  அதிமுக செய்தி தொடர்பாளர் கோவை செல்வராஜ், மாவட்ட கழக செயலாளர் முனியசாமி, ஆகியோர் உடனிருந்தனர். அதே வேளையில்  அ.தி.மு.க.வை கைப்பற்ற மீண்டும் களமிறங்கியுள்ள சசிகலா கடந்த 29 ஆம் தேதியன்றே  கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மரியாதை செலுத்தினார். அதே நாளில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய பிரசார வாகனத்திலேயே அவர் மதுரையிலிருந்து பசும்பொன்னுக்கு வந்து பெரும் திரளான ஆதரவாளர் கூட்டத்துடன் அங்கிருந்த தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். இந்த ஆண்டு அதிமுக தரப்பில் இரண்டு பெரும் தலைகளும் பசும்பொன்னுக்கு வராத நிலையில் சசிகலா முந்திக்கொண்டு  வந்து அஞ்சலி செலுத்தியது, ஏற்கனவே அதிமுகவினர் மீது அதிருப்தியில் இருக்கும் முக்குலத்தோர் மத்தியில் சசிகலாவிற்கு மேலும் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. 

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)