நெமிலி அருகே ஓட்டு வீடு இடிந்து விழுந்தது நெமிலி ஒன்றிய குழு தலைவர் நேரில் சென்று ஆறுதல்
நெமிலி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்டஇலுப்பை தண்டலம் கிராமத்தை சேர்ந்தவர் குமார் வைஷ்ணவி தம்பதியினர் இவர்கள் வசித்துவந்த ஓட்டு வீடு கடந்த நான்கு நாட்களாக பெய்து வரும் கனமழையால் சுவர் ஊரி திடீரென்று கீழே விழுந்தது உயிர் சேதம் ஏதும் ஏற்படாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
சம்பவம் அறிந்த நெமிலி ஒன்றியக்குழு தலைவர் பெ.வடிவேலு பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ரூபாய் 10 ஆயிரம் நிதி உதவி வழங்கினார் இந்த நிகழ்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சி செல்வகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் விநாயகம், ஊராட்சி மன்றத் தலைவர் அனுசுயா மகாலிங்கம், ஆகியோர் உடன் இருந்தனர்.