சினிமா பாணியில் சேஸிங்.. திருடர்களை விரட்டிப் பிடித்த போலீஸ்

 


கோவை: வாகன போக்குவரத்து நிறைந்த பொள்ளாச்சி பழனி சாலையில் விடாமல் துரத்தியபடி சினிமா பாணியில் மாருதி காரை போலீசார் பின் தொடர்ந்து சென்று, சின்னபாளையம் பகுதியில் காரை மடக்கி பிடித்தனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலை தளி பகுதியில் மாமரத்துப்பட்டி தென்குமாரபாளையம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரிடம் நேற்று வாலிபர்கள் சிலர் மிரட்டி அவர் வைத்திருந்த மாருதி கார் மற்றும் அவர் அணிந்திருந்த 3 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். 

இதையடுத்து தங்கராஜ் தளி காவல் நிலையத்தில் புகார் அளித்ததார். இதன் பேரில் காவல் துறையினர் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வழிப்பறியில் ஈடுபட்ட வாலிபர்கள் தப்பிச் செல்வதாக தகவல் அளித்தனர். அதன்பேரில் பொள்ளாச்சி வழியாக தப்பிச் செல்வது தெரிந்ததை அடுத்து, கோவை மாவட்ட காவல் துறையினருக்கு இது குறித்து தகவல் அளித்தனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வரத்தினம் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி அறிவுறுத்தலின் படி, ஹைவே பேட்ரோல் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)