கரூர் மாணவி தற்கொலை விவகாரம்: காவல் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.. சரக டிஐஜி உத்தரவு..


 கரூர் பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில், சந்தேகத்தை தெரிவிக்க காவல் நிலையத்திற்கு சென்ற பெற்றோரை, காவல் ஆய்வாளர் தரக்குறைவாக பேசி தாக்கியதாகவும்  உயிரிழந்த மாணவியின் உறவினர்கள் புகார் தெரிவித்த நிலையில் நேற்று காவல் ஆய்வாளர் கண்ணதாசனை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்ற திருச்சி சரக டிஐஜி சரவண சுந்தர் உத்தரவு பிறப்பித்தார்

இந்த நிலையில் இன்று காவல் ஆய்வாளர் கண்ணதாசனை பணியிடை நீக்கம் செய்ய சரக டிஐஜி சரவண சுந்தர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கரூர் மாவட்டம், தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயின்ற 17 வயது பள்ளி மாணவி கடந்த 19-ஆம் தேதி மாலை பள்ளி முடித்து வீடு திரும்பிய நிலையில், தனது வீட்டில் பெற்றோர்கள் இல்லாத நேரத்தில் தற்கொலை கொண்டார்.

கோவையைத் தொடர்ந்து கரூர் அருகே பள்ளி மாணவி தற்கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடிதம் மற்றும் டைரி செல்போன் உள்ளிட்டவைகளை வெங்கமேடு போலீஸார் கைப்பற்றி  தகவலை சேகரித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி, மாணவி உயிரிழந்தது தொடர்பாக புகார் அளித்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஆய்வாளர் கண்ணதாசனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி எஸ்.பி.சுந்தரவடிவேல் உத்தரவிட்டிருந்தார்.