தீபாவளிக்கு எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம்? அரசு ஒதுக்கிய நேரம் இதோ!

 தீபாவளி பண்டிகை கொண்டாட மக்கள் தயாராகிவருகிறார்கள். அனைவரும் புத்தாடை எடுப்பதிலும், பட்டாசுகள் வாங்குவதிலும் மும்முரமாக இருக்கின்றனர். இதற்கிடையே தடை செய்யப்பட்ட வேதி பொருள்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பட்டாசுகளை வெடித்தால் காவல் துறை, அரசு அதிகாரிகளே பொறுப்பு.

தடை செய்யப்பட்ட பட்டாசை வெடிக்கக்கூடாது என அரசு விளம்பரப்படுத்த வேண்டும். சரவெடியை உற்பத்தி செய்யவோ, வாங்கவோ, விற்கவோ, வெடிக்கவோ கூடாது. பேரியம் நைட்ரேட் கொண்டு பட்டாசு தயாரிக்கவும், விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்படுகிறது. போலி பசுமை பட்டாசுகளை விற்றால் உரிமம் ரத்து செய்யப்படும். நீதிமன்ற உத்தரவு கடைப்பிடிக்கப்படுவதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டது. 


Diwali Guidelines: தீபாவளிக்கு எந்த நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம்? அரசு ஒதுக்கிய நேரம் இதோ!

இந்நிலையில், “தீபாவளியன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிவரை, மாலை 7 மணி முதல் 8 மணிவரை பட்டாசு வெடிக்கலாம் அதிக சத்தம் எழுப்பும் சரவெடிகளை வெடிக்கக்கூடாது. உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், வழிபாட்டு தளங்கள் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு வெடிக்கக்கூடாது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி அதிகம் சத்தம் எழுப்பும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.  உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழ்நாட்டில் அமலில் இருப்பதால் அதனை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். அதனை மாவட்ட நிர்வாகம் கண்காணித்து உறுதிப்படுத்த வேண்டும். 

மீறுவோர்கள் மீது கண்டிப்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம், காலை ஒரு மணி நேரமும் மாலை ஒரு மணி நேரமும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. 

அதனை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று காலை தலைமை செயலாளர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)