இளம்பெண்ணுடன் அநாகரிகமாக நடந்து கொண்ட காவலர் பணியிடை நீக்கம்.....
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி. கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழக காவல்துறையின் ஆயுதப்படை காவலராக தேர்வு பெற்றார். அதன்பின்னர் இவர் கோவை மாநகர ஆயுதப்படையில் காவலராக பணியாற்றி வருகிறார்.
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்ட இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், அவரது மைத்துனர் மனைவியுடன் பழக்கம் இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் நேற்று மாலை கோவை வாலாங்குளம் கரையில் அமைக்கப்பட்டுள்ள பொழுதுபோக்கு பூங்காவில் மைத்துனர் மனைவியும், பாலாஜியும் அமர்ந்து பேசி வந்துள்ளனர்.
அப்போது இருவரும் முத்தமிட்டு அத்துமீறலில் ஈடுபடவே அப்பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுனர்கள், சிலர் அக்காட்சியை தங்களது செல்போனில் படம் பிடித்ததுடன் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டதாக கூறி இருவரிடமும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.
இது தொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகியதை தொடர்ந்து சீருடையில் பொது இடத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் பாலாஜியை தற்காலிக பணிநீக்கம் செய்து கோவை மாநகர ஆயுதப்படை துணை ஆணையர் முரளிதரன் உத்தரவிட்டுள்ளார்.