கலவை அடுத்த நெல்லூர் கிராமம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பி ராஜசேகரன் இவர் நெல்லூர் கிராமத்தில் சித்தார்த்த புத்த விஹார் பீடம் அமைத்து பூஜை மற்றும் ஏழை எளிய மாணவர்களுக்கு இலவச இரவு பள்ளி நடத்தி வருகிறார்
இவரின் செயல்பாடுகளைகவனித்து வந்த தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை பகவன் புத்தரின் அருளறம் நிலைபெற மீளுருவாக்கப்படும் தமிழ்நாடு பவுத்தர்கள் சங்கப் பேரவையின் அனைத்து முறைகளையும் நடைமுறைப்படுத்தி தம்மத்தையும் விகாரினையும் வளர்த்து பௌத்தம் நிலைபெற பாடுபடுவார்
என்கிற நம்பிக்கையுடன் தமிழ்நாடு பௌத்தர்கள் சங்கப் பேரவை சங்கப் பரிபாலன வண.பிக்கு போதி அம்பேத்கர் மகா சங்க செயலாளர் மற்றும் சங்க நிறுவனர் தலைமை ஒருங்கிணைப்பாளருமான கௌதம சன்னா ஆகியோர் இணைந்து
பி. ராஜசேகரனுக்கு சங்கத்தினர் என சான்றிதழ் வழங்கி கவுரவித்தனர்.