சயனபுரம் பெரிய ஏரி கால்வாய் தூர்வாரும் பணி

 


நெமிலி ஊராட்சி ஒன்றியம், நெமிலி குசஸ்தலை ஆற்றிலிருந்து சயனபுரம் பெரிய ஏரிக்கு செல்லும் நீர் வரத்து கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சயனபுரம் ஏரிக்கு தண்ணீர் சரியாக வரவில்லை என பொதுமக்கள் புகார் தெரிவித்ததையடுத்து

 


நேற்று நெமிலி ஒன்றிய கிழக்கு செயலாளர், நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ.வடிவேலு நேரில் பார்வையிட்டார் அதனைத் தொடர்ந்து இன்று நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் அவரின் சொந்த செலவில் பொக்லைன் இயந்திரம் கொண்டு கால்வாய் தூர்வாரப்பட்டு வருகிறது

 இதனை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. பவானி வடிவேலு, ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் முஹம்மது அப்துல் ரகுமான் மற்றும் சங்கர், சரவணன், தினேஷ், நசீர், வேலு, கோவிந்தராஜ், பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.