“ராஜேந்திர பாலாஜிக்கு எதிரா எல்லா ஆதாரங்களும் இருக்கு” : ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்!

 


வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி பெற்று மோசடி செய்த வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்களும் உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.

ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் தமிழக பால்வளத்துறை முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விஜய் நல்லத்தம்பி, ரவீந்திரன் ஆகியோர் அளித்த புகாரில் பதிவான வழக்கில் முன் ஜாமின் கோரி ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட நால்வரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு இறுதி விசாரணை நடைபெற்றது.

காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜ் திலக் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு எதிரான புகாரில் இருபத்திமூன்று சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு, அவரது உதவியாளர் பலராமன் என்பவர் மூலம் தான் இந்த பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், நல்லதம்பியும் போலிஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றும் தெரிவித்தார். முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக அனைத்து ஆதாரங்கள் உள்ளதாகவும் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி முன்ஜாமின் மனுக்கள் மீதான உத்தரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்