காவலரை திருப்பி அடித்த இளைஞர்... கைகலப்பில் முடிந்த வாகன சோதனை
• M.Divan Mydeen
வாணியம்பாடி அருகே வாகன ஓட்டியை கன்னத்தில் அறைந்த சிறப்பு உதவி ஆய்வாளரை திருப்பி அடித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது
1/ 5
வாணியம்பாடி அருகே வாகன ஓட்டியை கன்னத்தில் அறைந்த சிறப்பு உதவி ஆய்வாளரை திருப்பி அடித்த இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
2/ 5
திருப்பத்தூர் மாவட்டம் ஆலாங்காயம் அருகே நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்( வயது30). இவர் இருசக்கர வாகனத்தில் ஆலங்காயம் வந்துள்ளார். அப்போது ஆலங்காயம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உமாபதி தலைமையில் போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
3/ 5
அப்போது மணிகண்டன் வந்த இருசக்கர வாகனத்தை சோதனைக்காக காவல் துறையினர் நிறுத்தக் கூறியும் நிற்காமல் சென்றதால் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உமாபதி, மணிகண்டனை துரத்தி சென்று அவரை தாக்கினார்.
4/ 5
இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் பதிலுக்கு சிறப்பு உதவி ஆய்வாளர் மீது தாகுத்தல் நடத்தி உள்ளார். பின்னர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5/ 5
இதனுடைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பரவி வருகின்றது. இதனை தொடர்ந்து மணிகண்டனை போலீஸ் தாக்கியதில் காயம் அடைந்ததாக கூறி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.