மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா சத்யன் இ.கா.ப. வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பு

 


ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர்  தீபா சத்தியன் இ.கா.ப.வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டார்

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை உச்சகட்ட ஆர்ப்பரிப்பு காட்டியதில் வரலாறு காணாத வகையில் கொட்டி தீர்த்த கன மழையினால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொண்ணை மற்றும் பாலாற்றில் நிமிடத்திற்கு சுமார் 10 ஆயிரம் கன அடி நீர் சென்று கொண்டுள்ளது

 பெரும்பாலான ஏரிகள் குளங்கள் மற்றும் நீர்நிலைகள் நிரம்பி உள்ளன ஆகவே பொது மக்களாகிய தங்கள் கீழ்க்கண்ட அறிவுரைகளை பின்பற்றுமாறு ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் தீபா சத்யன்  கூறியுள்ளார்

 பொது அறிவுரைகள் ஆறு மற்றும் ஓடைகளில் வெள்ளம் செல்லும் போது அதனை  கடந்து செல்வதை தவிர்த்தல் வேண்டும்,

 பொதுமக்கள் ஆற்றில் இறங்குவதும் மற்றும் குளிப்பதையும் தவிர்த்தல் வேண்டும், நீர்நிலைகளில் குழந்தைகள் இறங்காமல் பெற்றோர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும், சாலை பள்ளங்கள் அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் ஆபத்து ஏற்படும் எனவே அதிகாலை வேளையில் இருட்டான நேரங்களில் வெளியே செல்வதைத் தவிர்த்தல் வேண்டும்,

 மேலும் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் தடுக்கும் விதத்தில் மாவட்டம் முழுவதும் 326 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளுநர்கள் 85, நீந்துவது தேர்ச்சி பெற்ற தன்னார்வலர்கள் பேரிடர் பயிற்சி முடித்த 58, மீட்பு படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

 அவசர உதவிக்கு ராணிப்பேட்டை காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04172-271100,9884098100 என்ற எண்ணை அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)